15

ன்பது பாடல்களிலிருந்து அல்குல் என்கிற வார்த்தையைத் தூக்கிவிட்டு அதற்கு பதிலாக ஆகம், மறுங்குல், ஆடை மாதிரி வார்த்தைகளைப் போட்டு அச்சடித்திருக்கிறார்! அவர் மட்டுமல்ல இடக்கரடக்கல் என்கிற பெயரில் கிவாஜ, உவேசா என பாடல்களை சென்சார் பண்ணிய அறிஞர் பட்டியல் நூல்முழுக்கவே உண்டு.சங்கப் பாடல்கள் மட்டுமல்லாது நாட்டார் பாடல்களிலும் கூட சென்சார் பண்ணிய கொடூரக் கதைகளும் இருக்கிறது.

இந்த ஆராய்ச்சியாளர்களால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவராக பெருமாள்முருகன் முன்வைப்பது காளமேகப் புலவரை. சிலேடைப் பாடல்களில் வல்லவரான அவர் எழுதிய இரட்டை அர்த்தப் பாடல்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு தவறான அர்த்தங்களோடும் அல்லது சொற்கள் சென்சார் செய்யப்பட்டும் வெளியாகியிருப்பதை வெட்டவெளிச்சமாக்குகிறார் பெருமாள்முருகன். சிவ பெருமானையும் சுன்னியையும் ஒப்பிடுகிற ஒரு பாடலும் அதன் விளக்கமும் இந்துத்துவர்கள் கண்ணில் சிக்கினால் கால இயந்திரத்தில் ஏறிப் போய் காளமேகப் புலவரையே பந்தாடிவிடுவார்கள் என்கிற ரகம்! கூதியில் தொடங்கி சுன்னியில் முடியும் படியெல்லாம் அவர் பாடல் எழுதியிருக்கிறார்! இதுதான் அந்தப் பாட்டு:

சிரித்து புரமெறித்தான் சிந்துரத்தை பற்றி
உரித்துதிரம் பாய உடுத்தான் – வருத்தமுடன்
வாடும் அடியாருடன் வானவரும் தானவரும்
ஓடும்பயம் தீர்த்த நஞ் சுணி

இதற்கான உரையை நூலில் காண்க. “படிப்பறிவைக் கடவுளோடு தொடர்புபடுத்தி புனிதமாக்கி வைத்திருக்கிறோம். புனிதம் என்றால் அதைக் கீழ்ப்பட்ட சாதிகள் தொடலாமா? இந்தப் புனிதம் பல்வேறு நிலைகளில் செயல்படுகின்றன. அவற்றை எழுத்தில் கொண்டு வந்து விடக்கூடாது என்பதும் அப்படிப்பட்டதுதான். நடைமுறையில் இருக்கலாம் ஆனால் எழுத்தில் கூடாது! எழுத்து புனிதமானது. புனிதமான விஷயங்களை மட்டுமே எழுத்தில் கொண்டு வரவேண்டும். இந்த வரையறை எழுதப்படாத விதியாக நம் சமூகத்தில் தொடர்ந்து வருகிறது. அதனால் தான் கெட்டவார்த்தையைத் தேடியாக வேண்டியுள்ளது.” என்கிறார் பெருமாள்முருகன். இந்நூலின் ஒட்டுமொத்த நோக்கமும் இது மட்டும்தான்!

| கெட்ட வார்த்தை பேசுவோம் | கட்டுரைகள் | பெருமாள்முருகன் | கலப்பை | 2011 | ரூ.100 |

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book